தமிழ் கிறிஸ்தவர்கள்

 மின்னிதழ்

 

முதல் பக்கம்

ணவருக்காக ஜெபிப்பது

மனதிற்காக ஜெபித்தல்

பயங்களுக்காக ஜெபியுங்கள்:

ஆரோக்கியத்திற்காக ஜெபியுங்கள்

கணவரின் பாதுகாப்பிற்கான ஜெபம்

உணர்ச்சிகளுக்கான ஜெபம்

மனந்திரும்புதலுக்கான ஜெபம்

விசுவாசத்திற்கான ஜெபம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜெபிக்கும் மனைவியின் வல்லமை : பாடம் : 01 :

பிற்சேர்க்கை

அடுத்த பாடம்

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்கலளைப் பார்க்கிலும் உயர்ந்தது. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள். நீதிமொழிகள் 31:10,11,12.

 

ஜெபத்தின் மூலம் தேவனுடைய வல்லமை உங்கள் வாழ்வில் வருவதற்கு அனுமதியுங்கள்:

01.   ஜெபமென்பது உங்கள் கணவரின்மேல் அதிகாரம் செலுத்துவதற்குரிய ஒரு ஆயுதமல்ல (கணவருக்கெதிராக ஜெபமென்ற ஆயுததத்தைப் பயன்படுத்த முடியாது).

02.   உங்கள் கணவரைத் தேவன் ஆசீர்வதிப்பதின் மூலம் உங்கள் வாழ்விலும் அதே ஆசீர்வாதங்கள் கடந்துவரும்படி; தேவனுடைய வல்லமையை ஜெபத்தின் மூலம் வரவேற்கலாம்.

03.   என் குடும்ப வாழ்வின் பிரச்சனைகள் திரும்படி ஜெபத்தை நான் முதலாவதாக வைத்திருக்கவில்லை; அதைக் கடைசியாகவே முயற்சி செய்தேன். முதலில் பின்வரும் காரியங்களையே நான் செயல்படுத்தினேன்.

ð      வாக்குவாதம் செய்தல்

ð      முரட்டுத்தனமாகப் பேசுதல்

ð      அசட்டை செய்தல்

ð      ஒதுங்கிப் போகுதல்

ð      எதிர்த்து நிற்குதல்

ð      சவால் விடுதல்

ð      மௌனமாயிருந்து பழிவாங்குதல் (இது மிகவும் பிரபலமானது).

04.   உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிப்பது மிகவும் எளிது. பெரும்பாலும் கணவர்கள் அக்கறையில்லாமலும், எரிச்சலூட்டுபவர்களாகவும், துன்புறுத்துபவர்களாகவும், அசட்டை செய்பவர்களாகவும், உங்கள் உணர்வுகளைப் புண்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்காக ஜெபிப்பது கடினமான காரியமாகவே தோன்றும். உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிப்பதுபோல உங்கள் கணவருக்காக ஜெபிக்க உங்களால் முடியாது; ஏனென்றால் நீங்கள் உங்கள் கணவரின் தாயாரல்ல. தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள்மேல் நமக்கு அதிகாரம் உண்டு, ஆனால் கணவர் மேல் நமக்கு அதிகாரமில்லை. ஆனாலும் மொத்தமாக சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது (லூக்கா 10:19).

குடிவெறி, வேலையில் அதிக வெறித்தனம், சோம்பேறித்தனம், மன அழுத்தங்கள், வியாதிகள், அவதூறு மற்றும் நிந்தனை செய்தல், கவலைகள், பயங்கள், தோல்விகள் போன்ற பல்வேறுவிதங்களில் உங்கள் கணவரைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் பிசாசின் வல்லமைகளிலிருந்து அவர் விடுதலையடையும்படி நீங்கள் தேவனிடம் விண்ணப்பிக்கலாம்.

05.   உங்கள் திருமண வாழ்வில் ஏற்படும் தோல்விகளும், ஏமாற்றங்களும் உங்களைச் செயலிழக்கச் செய்து அதின் விளைவாகச் சரியானதைச் செய்வதை விட்டு விலகும் சோதனைக்குள் நீங்கள் தள்ளப்பட வாய்ப்புகள் உண்டு.

06.   இதுபோன்ற சில சூழ்நிலைகளில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நான் ""ஆண்டவரே, இதுபோன்ற வாழ்வை என்னால் தொடர்ந்து நடத்த முடியாது, நீர் எனக்கு உதவி செய்யும்'' என்று ஜெபித்திருக்கிறேன். அப்போதெல்லாம் தேவன் என்னிடம்:

ð      எனது வாழ்வை அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக அர்ப்பணித்தால்,

ð      விட்டுவிட்டு ஓட வேண்டும் என்ற எண்ணத்திற்கு மரித்தால்,

ð      என்னுடைய தேவைகளை அவரிடம் விட்டுவிட்டால்

எனது கணவர் மற்றும் குடும்ப சூழ்நிலை மாறுவதற்காக ஜெபிப்பதற்குரிய வழிமுறைகளைக் காட்டுவதாகவும், எனது குடும்ப சூழ்நிலையை உயிரடையச் செய்வதாகவும், தனது ஆசீர்வாதத்தை என் மேலும், என் கணவர் மேலும் பொழிவதாகவும் வாக்குப்பண்ணியுள்ளார்.

07.   நான் தினந்தோறும் எனது கணவருக்காக ஜெபிக்கத் துவங்கினேன். அதற்குமுன்பு அவருக்காக நான் ஜெபிக்கவோ அவரை ஆசீர்வதிக்கும்படி தேவனிடம் கேட்கவோ நான் விரும்பியதேயில்லை. அவர் எவ்வளவு மோசமான மனிதரென்று ஒரு மின்னலை அவர் மீது அனுப்புவதின் மூலம் தேவன் உணர்த்த வேண்டுமென்றும், அவருக்குள்ளிருக்கும் பொல்லாத காரியங்களைத் தேவன் அழிக்கவும் வேண்டுமென்றும் விரும்புபவளாகவே இருந்தேன். நான் ஜெபிக்க ஜெபிக்க என்னிலும், என் கணவரிலும், எங்கள் குடும்பத்திலும் பல மாற்றங்கள் நிகழுவதைக் காண ஆரம்பித்தேன். அந்த மாற்றங்கள் ஒரே மூச்சில் வந்துவிட்டனவா? சில காரியங்களுக்கு உடனடியாகவும், வேறு சில காரியங்களுக்குத் தாமதமாகவுமே பதில்கள் கிடைத்தன. காலத்தைத் தேவன் கட்டுப்படுத்துகிறார். ஜெபிப்பதுதான் என்னுடைய வேலையாகும்.

08.   ஒருவருடைய தாயின் ஜெபத்தைவிடவும், அவருடைய மனைவி அவருக்காக ஜெபிக்கும் ஜெபமே அவருடைய வாழ்வில் அதிகமான மாற்றங்களைக் கொண்டுவரும் வல்லமையுடையதாகும். ஒருவருக்குத் திருமணமாகும்போது அவர் தனது தாயையும், தகப்பனையும் விட்டு விலகி, தன் மனைவியோடே இசைந்திருக்கிறார் (மத்தேயு 19:5). அவர்கள் ஒரே மனமும், ஐக்கியமான ஆவியுமுள்ள ஒரு குழுவாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்திருக்கும்போதுள்ள வல்லமையை மிகவும் பெரியதாகவே தேவன் கருதுகிறார். ஏனென்றால் அவர்கள் இருவரையும் இணைத்து, அவர்களின் ஜெபங்களுக்குரிய பலனாக அதிகமான வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அருளுகிறார். உன்னுடைய சரீரத்தின் வலது பக்கத்திற்காக ஜெபிக்கும் நீ அதே சரீரத்தின் இடது பக்கத்திற்காக ஜெபிக்காமலிருக்க முடியுமா? உனது கணவருக்கு என்ன சம்பவிக்கிறதோ, அதே காரியம்தான் உனக்கும் நேரிடும்.

09.   திருமண வாழ்வில் இதுவரை நேரிட்ட எல்லா தீங்குகளையும், நஷ்டங்களையும் தேவனால் சரிப்படுத்த முடியும் என்பதற்குரிய வாக்குத்தத்தம் நமக்கு உண்டு. வெட்டுக்கிளிகள்... பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல் 2:25). நீங்கள் அனுபவித்த வேதனையை, நம்பிக்கையில்லாமையை, கடின அனுபவங்களை, மன்னிக்க முடியாத நிலைமையை தேவன் எடுத்துப்போடுவார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம். சாவின் விளிம்பில் அல்லது பள்ளத்தாக்கில் இருந்தாலும் தேவனால் அன்பையும், வாழ்வையும் புதுப்பிக்க அல்லது உயிர்ப்பிக்க முடியும்.

கல்லறையினண்டையில் சென்ற மகதலேனா மரியாள் இயேசுவைக் காணவில்லையே என்று தவித்தபோது அவரை மரித்தவராக அல்ல, தேவனுடைய வல்லமையால் உயிரோடு எழுந்தவராகக் கண்டாள் என்பதை நினைத்துப் பாருங்கள். நம்பிக்கையில்லா அளவு ஒரு காரியம் செத்துப்போய்விட்டது என்று நினைக்கும் சூழ்நிலையில் அக்காரியம் மீண்டும் உயிர் பெறுமானால் அது எவவளவு அதிகமான சந்தோஷத்தைக் கொண்டு வருவதாயிருக்கும்! இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடெழுப்பின அதே தேவ வல்லமைதான் உங்கள் திருமண வாழ்விலும் செத்துப்போன நிலையிலுள்ள பகுதிகளை மீண்டும் உயிரோடு எழுப்பும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்                 ( 1 கொரிந்தியர் 6:14)

தேவனுடைய வல்லமை மட்டுமே இதைச் செய்ய முடியும். கடினமான நேரங்களிலும் ஜெபத்தின் மூலம் பெலனடையக்கூடிய, தேவனுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட, அன்பு உயிர்ப்பிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் ஒரு இருதயம் நமக்குத் தேவை. இன்பத்தை அனுபவிக்கும்படி துன்பத்தின் வழியே கடந்துசெல்ல நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

10.   ஒரு மாதிரி ஜெபம்:

தேவனே, இந்தப் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, எங்கள் வாழ்வை உருக்குலைக்கும் சக்திகளைத் தகர்த்தெறியும்படி ஜெபிக்கிறேன். எங்களிலிருக்கும் வேதனைகளையும், எங்களையே நாங்கள் பாதுகாத்துக்கொள்ளும்படி உருவாக்கி வைத்திருக்கும் ஆயுதங்களையும் எங்களைவிட்டு அகற்றிப்போடும். மன்னியாமை என்னும் பள்ளத்திலிருந்து எங்களைத் தூக்கிவிடும். உம்முடைய அன்பையும், சமாதானத்தையும், ஒப்புரவாக்குதலையும் எங்களுடைய செயல்களில் வெளிப்படுத்தும்படி எங்கள் மூலம் பேசுவீராக! எங்களுக்குக் குறுக்கே எழும்பி நிற்கும் எல்லாத் தடைச் சுவர்களையும் தகர்த்து, அதன் வழியே கடந்துசெல்ல எங்களுக்குப் போதியும். இப்போதுள்ள சூழ்நிலையை விட்டு எழும்பி, நீர் எங்களுக்காக வைத்திருக்கும் ஆரோக்கியம் மற்றும் முழுமைக்குள் செல்ல எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில் அவருடைய வல்லமையின்படியே ஜெபிககிறேன். ஆமென்!

11.   என்னைக் குறித்த காரியமென்ன? எனக்கும் ஜெபம் தேவை!

என் கணவர் எனக்காக ஜெபிப்பாரா? ஒருவேளை இல்லாமலிருக்கலாம்.

உங்கள் கணவருக்காக ஜெபிப்பதென்பது சுயநலமில்லாமல், நிபந்தனையில்லாத அன்பு மற்றும் தியாகத்துடன் நீங்கள் செய்யும் ஒரு பெரிய செயலாகும். உங்கள் கணவர் உங்களுக்காக இதே அர்ப்பணிப்புடன் ஜெபிப்பார் என்ற உறுதி இல்லாவிட்டாலும், நீங்கள் மிகுந்த வாஞ்சையுடன் அவருக்காக ஜெபிக்கும் அர்ப்பணிப்பிற்குள் வரவேண்டும். சிலருடைய கணவர்கள் தங்கள் மனைவிகளுக்காக ஒருபோதும் ஜெபிக்கிறவர்களாக இருப்பதே இல்லை. அவர் உங்களுக்காக ஜெபிக்கிறாரா, இல்லையா என்பது உங்கள் கவலையாயிருக்கக் கூடாது; அதைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

உங்கள் வாழ்வின் சந்தோஷமும், நிறைவும் உங்கள் கணவரின் ஜெபத்தையல்ல, தேவனோடுள்ள உங்கள் உறவைப் பொறுத்தே அமையும். ஆம், மனைவிகளுக்கும் ஜெபம் தேவைதான் என்றாலும்; தங்கள் கணவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்காக ஜெபித்தே ஆகவேண்டும் எந்த மனைவியும் எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பதோ, அல்லது கணவரின் ஜெபத்தைச் சார்ந்தோ வாழுவது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு பெண்ணின் திருமண வாழ்வில் முக்கியமானது: அவள் தினமும் அல்லது வாரந்தோறும் தனது இருதயத்திலுள்ளதை மனந்திறந்து பேசக்கூடிய, ஆவிக்குரியவர்களும், மிகுந்த நம்பிக்கைக்குரியவர்களுமான வேறு சில விசுவாசிகளான பெண்களுடன் சேர்ந்து ஜெபிப்பதற்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம் என்று நான் நம்புகிறேன். உண்மையுள்ளவர்களும், நம்பிக்கைக்குரியவர்களுமான பெண்களின் ஐக்கியம் கிடைப்பது மிகவும் அரிதான காரியம்தான் என்றாலும்; தேவையுள்ள ஆத்துமாக்களைத் தேவன் தனிமையில் தவிக்கவிடமாட்டார்.

இதுபோன்ற ஜெப ஐக்கியங்களில் மற்ற பெண்களிடம் உங்கள் கணவரைக் குறித்த எல்லா விபரங்களையும், அவருடைய தனிப்பட்ட வாழ்வின் இரகசியங்களையும் கூறவேண்டும் என்று ஒருபோதும் நினைத்து விடாதிருங்கள். உங்கள் இருதயத்தைத் தேவன் நேர்மையுள்ளதாக்கும்படியும், நல்ல மனைவியாக இருப்பது எப்படியென்று தேவன் காண்பிக்கும்படியும், உங்கள் ஆத்துமாவிலுள்ள பாரங்களைத் தேவனிடம் பகிர்ந்துகொள்வதும், உங்கள் கணவரின்மேல் தேவனுடைய ஆசீர்வாதங்கள் வரும்படி கேட்பதுமே இதுபோன்ற ஐக்கியங்களில் முதலிடம் பெறவேண்டும்.

உங்கள் கணவரின் ஜெப ஆதரவும், ஜெபக்குழுவின் ஐக்கியமும் இல்லாமலேயே நீங்கள் ஜெபிக்கும்போது காரியங்கள் நிகழத் துவங்குவதைக் காண்பீர்கள். உங்கள் கணவருக்காகப் பல்வேறு விதங்களில் ஜெபிக்க வேண்டியதிருப்பதைக் குறித்து நீங்கள் மனச்சோர்வடையக் கூடாது. ஒரே நாளில், ஒரே வாரத்தில் அல்லது ஒரே மாதத்தில் நீங்கள் ஜெபித்து முடிக்க வேண்டுமென்று கட்டாயம் ஏதுமில்லை. கடினமான பிரச்சனைகள் அல்லது உங்களுக்கு மலைப்பை உண்டுபண்ணும் காரியங்களைச் சந்திக்கும்போது உபவாசத்துடன் கூடிய ஜெபம் அதிக பெலனுள்ளதாயிருக்கும். வேத வசனங்களின் அடிப்படையில் ஜெபிப்பது இன்னும் வல்லமையாயிருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாகப் பொறுமையை இழந்துவிடாதிருங்கள். குணமாகுதலைத் தேவன் கொண்டுவரும்படி காத்திருங்கள். நீங்கள், உங்கள் கணவர் இருவருமே பூரணமானவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். தேவன் ஒருவரே பூரணமானவர். உங்கள் திருமண வாழ்வில் நடக்கவேண்டிய அனைத்திற்காகவும் தேவனையே நோக்கிப் பாருங்கள். அவை எப்படி நடக்கும் என்பதைக் குறித்துக் கவலைப்படாதிருங்கள்.

ö     ஜெபிப்பது உங்கள் பொறுப்பு

ö     பதிலளிப்பது தேவனுடைய பொறுப்பு

ö     காரியத்தைக் கர்த்தரின் கரங்களில் விட்டுவிடுங்கள்.

 

பாடம் 1ன் முக்கியக் குறிப்புகள் பின்வருவனவாகும்:

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள். நீதிமொழிகள் 31:10,11,12.

                                                                                                                                        

ö       உங்களுடைய கணவரின் ஜீவியத்திலுள்ள சத்துருவின் அதிகாரத்தின்மேல் உங்களுக்கு வல்லமை உண்டு, ஏனென்றால்: சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ள உங்களுக்கு நான் அதிகாரம் கொடுக்கிறேன் என்று இயேசு கூறியுள்ளார் (லூக்கா 1):19).

ö       தீமையைத் தடுத்து நிறுத்தவும், நன்மையை அனுமதிக்கவும் உங்களுக்கு அதிகாரம் உண்டு. உங்கள் குடும்ப வாழ்க்கையின்மேல் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க உங்களால் முடியும். ஏனென்றால்: பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று இயேசு வாக்குப்பண்ணியுள்ளார் (மத்தேயு 18:18).

ö       வேறு எவருடைய ஜெபத்தையும்விட, உங்கள் கணவருக்காக நீங்கள் ஜெபிக்கும் ஜெபமே அதிக வல்லமையுள்ளது; ஏனென்றால் உங்கள் இருவரையும் இணைக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஜெபத்திற்கு அதிக பெலனைச் சேர்க்கிறார். மத்தேயு 19:5ல் ...புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே  இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று இயேசு கூறியுள்ளார்.

ö       திருமண வாழ்வில் இதுவரை நேரிட்ட எல்லா தீங்குகளையும், நஷ்டங்களையும் தேவனால் சரிப்படுத்த முடியும். ஏனென்றால்: ...வெட்டுக்கிளிகள்... பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல் 2:25) என்று தேவன் வாக்குப்பண்ணியுள்ளார்.

ö       இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடெழுப்பின அதே தேவ வல்லமை உங்கள் திருமண வாழ்வில் செத்துப்போன நிலையிலுள்ள பகுதிகளை மீண்டும் உயிரோடு எழுப்பும். ஏனென்றால்: தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார் (1 கொரிந்தியர் 6:14) என்று வேதாகமம் வாக்களிக்கிறது.

அடுத்த பாடம்

 



Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font.

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 07/29/04 08:29:50 PM.

Hosted by www.Geocities.ws

1