முகப்பு-ஸ்ரீ காத்தாயி கட்டுரைகள் கோயில்கள் புகைப்படங்கள் Associated sites

 

 

banner

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில்களைப் பற்றிய விவரங்கள் தாங்கி வரும் இணையதளம்


1. கட்டுரை பகுதி

இப்பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மனைப் பற்றிய அனைத்து கட்டுரைகளையும் கொண்டு வரவுள்ளோம். தாங்களின் உதவியால் அனைத்து ஸ்ரீ காத்தாயின் பக்தர்களுக்கும் பயனுள்ள பகுதியாக அமைய வேண்டுகிறோம். தாங்களும் பங்கு கொண்டு பயனுள்ள பகுதியாக்கவும்.

2. துதிகள் பகுதி

இப்பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன், ஸ்ரீ வீரன் [ஸ்ரீ வீரபத்திரன்], ஸ்ரீ பச்சைவாழி அம்மன், ஸ்ரீ கஞ்சமலை சிவனார் ஆகியோற் பற்றிய அனைத்து துதிகளையும் கொண்டு வரவுள்ளோம். தாங்களின் உதவியால் அனைத்து ஸ்ரீ காத்தாயின் பக்தர்களுக்கும் பயனுள்ள பகுதியாக அமைய வேண்டுகிறோம். தாங்களும் பங்கு கொண்டு பயனுள்ள பகுதியாக்கவும்.

3. கோயில்கள் பகுதி

இப்பகுதியில் தமிழகம் முழுவதும் பரவியுருக்கும் அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில்களைப் பற்றி அனைத்து விவரங்களையும் [தல பெருமை, வழி, தொடர்புக் கொள்ள வேண்டிய தகவல்கள்] கொண்டு வரவுள்ளோம். தாங்களின் உதவியால் அனைத்து ஸ்ரீ காத்தாயின் பக்தர்களுக்கும் பயனுள்ள பகுதியாக அமைய வேண்டுகிறோம். தாங்களும் பங்கு கொண்டு பயனுள்ள பகுதியாக்கவும்.

4. படங்கள் பகுதி

இப்பகுதியில் தமிழகம் முழுவதும் பரவியுருக்கும் அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில்களின் புகைப்படங்கள், திருவிழா புகைப்படங்கள் கொண்டு வரவுள்ளோம். தாங்களின் உதவியால் அனைத்து ஸ்ரீ காத்தாயின் பக்தர்களுக்கும் பயனுள்ள பகுதியாக அமைய வேண்டுகிறோம். தாங்களும் பங்கு கொண்டு பயனுள்ள பகுதியாக்கவும்.


இவ்விணைய தளத்தினைப் பற்றி

தமிழ்நாட்டிலுள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோயில்கள் குறித்த அனைத்துத் தொடர்புடைய விவரங்களையும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் ஒரு முயற்சி.

தாங்களின் உதவியால் அனைத்து ஸ்ரீ காத்தாயி அம்மன் பக்தர்களுக்கும் பயனுள்ள இணைய தளமாக அமைய வேண்டுகிறோம். தாங்களும் தங்கள் ஊர் அருள்மிகு காத்தாயி அம்மன் கோயில்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து, பங்கு கொண்டு இணைய தளத்தினை பயனுள்ளதாக்கவும்.

அருள்மிகு காத்தாயி அம்மன் அருள் பெருக வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டின் ஆன்மீகப் பாரம்பரியம் என்பது மண்ணோடும், மரங்களோடும், கிராமிய வழிபாட்டு முறைகளோடும் ஆழமாகப் பிணைந்துள்ளது, நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு இங்கு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நீண்ட காலமாக மக்கள் தங்கள் கிராமங்களையும், எல்லைகளையும், தீய சக்திகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காப்பதற்காக சில தெய்வங்களை வழிபட்டனர். அவ்வாறு தமிழர்களால் அன்றும் இன்றும் போற்றி வணங்கப்படும் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் தான் "காத்தாயி அம்மன்" ஆகும்.

"காத்த ஆயி" என்பதால் "காத்தாயி" என்று அழைக்கப்படுகிறார். தீமைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் தன் பக்தர்களைக் காத்தருளும் தாயாக இவள் பார்க்கப்படுகிறாள்.

இதன் காரணமாகவே, காத்தாயி அம்மன் சாந்த சொரூபியாக, கனிவுடனும் அதே சமயம் வீரியத்துடனும் காட்சியளிக்கிறாள். மேலும் அவள் தாயின் வடிவமாக மடியில் குழந்தையுடன் இருப்பவளாகவே பல பிரதான கோவில்களில் காட்சி தருகிறார்.

காத்தாயி அம்மன் கோவில்களில் பச்சைவாழி அம்மன் [பச்சை அம்மன்], கஞ்சமலை சிவன், வினாயகர், முருகன், பேச்சாயி, பூங்குறத்தி, வீரன், சப்த ரிஷிகள், முனிவர்கள் என்று எல்லா தெய்வங்களையும் வழிபட முடியும்.


காத்தாயி என்பது காற்று ஆயி – ஆவிரூபமான பேய்த் தெய்வம். பேச்சாயி என்பது பேய்ச்சி ஆயி –பிடாரி ஒரு குரூரக் கடவுள் என்றெல்லாம் எண்ணியிருந்தால் ஸ்ரீமகாபெரியவாள் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் தரும் அற்புத விளக்கத்தைப் பாருங்கள்.


நவராத்திரி நாயகியர் : ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்