அனுமன் புகழ் உரைக்கும் கட்டுரைகள்

கட்டுரைகள் :: பொருளடக்கம்


1. அனுமார் அனுக்கிரஹிப்பார்

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

.....ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, வினயத்தில் உச்சநிலை - இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் என்று உண்டு என்றால் அது ஆஞ்ஜனேய ஸ்வாமிதான்.


.....ஆஞ்ஜனேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசித்து விடும். பரம வினயத்தோடு பகவத் கைங்கர்யம் செய்து கொண்டு எல்லாருக்கும் நல்லது செய்வோம். சொடுக்கவும்


2. மாருதி மஹிமை

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

.....ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்மைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை ....


.....அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள 'புத்திமதாம் வரிஷ்ட'ராகியிருக்கிறார். மனஸை நல்லதிலேயே 'ஸ்டெடி'யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி 'புத்திமதாம் வரிஷ்ட'ராயிருக்கிறார். சொடுக்கவும்


3. அஞ்ஜனைச் செல்வன் 'அஜாட்யம்' அருளட்டும்

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

..... 'அரோகதா' என்றால் ஆரோக்யம். அதுவும் ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பனுக்கு உண்டாகிறது. அப்புறம், ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பவனுக்கு உண்டாகிறது. அப்புறம், 'அஜாட்யம்' என்று ஒன்று போட்டிருக்கிறது. அதற்கு 'ஜடமாக இல்லாத தன்மை' என்று அர்த்தம். ..... 'அஜாட்யம்' - ஜடமாயில்லாமலிருப்பது என்றால் என்ன அர்த்தம்? சொடுக்கவும்


4. ராமகுருவின் சிஷ்ய ஹநுமார்

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

துளஸீதாஸ் ஏதோ கல்பனையில் எழுதினாரென்றில்லாமல் ப்ரத்யக்ஷத்திலேயே ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹத்துக்குப் பாத்திரமானவர். அவருடைய ஜீவ்ய சரித்ரத்தைப் பார்த்தால் அதில் ஆஞ்ஜநேயரோடு அவர் நேர்முகமாகவே எவ்வளவு நெருக்கமாகப் பழகியிருக்கிறாரென்று தெரியும். அவரையே ஆஞ்ஜநேய அம்சமாகச் சொல்வதுண்டு. ஆஞ்ஜநேயர் மாதரியே அவரும் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்தான்..... சொடுக்கவும்


5. ஆஞ்சநேயர் அருள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

.... அனுமாரைப் பிரார்த்தனை செய்தால், பூஜை செய்தால், நல்ல புத்தி, நல்ல சக்தி இதெல்லாம் கிடைக்கும். அவரை நினைத்த மாத்திரத்திலே இதெல்லாம் வரும்.

.... ஆனால் ஹனுமானுடைய சேவையில் எந்தப் பின்னணியுமே கிடையாது. 'விஸ்வார்த்த சேவா, ஸ்வயம் சேவா' என்பார்கள். பிரதிபலனை எதுவும் எதிர்பார்க்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பணி புரிந்தவர் ஹனுமான். அவருடைய உள்ளத்திலே இருந்தது.... சொடுக்கவும்


6. ஸமய ஸஞ்ஜீவி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

...... சிவனுக்கு எப்போதும் அபிஷேகத்தில் ப்ரியம் அதிகம். அது போல் மஹாவிஷ்ணு அலங்கார ப்ரியர். சூரிய பகவானுக்கோ நமஸ்காரம் செய்தால் போதும். பூரண திருப்தியை அடைவார். இதேபோல் ஹநுமத் ஸ்மரணாத் பவேத். ஸ்மரித்தால், நினைத்தால் போதும்; அநுமனின் அருளைப் பெற்று எல்லாச் செல்வங்களையும் பெறலாம். சொடுக்கவும்


7. ஆற்றல் அருளும் ஆஞ்சனேயர்

திரு டி.எஸ்.இராகவன்

அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம். முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்....... சொடுக்கவும்




|| ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க ||

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்

நம்பினோம் நாவரசை நாங்களே

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.