ஸ்ரீ ஹநுமத் ஸ்துதிகள் தமிழ் எழுத்தில்

|| ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை பற்றிய ஸ்துதிகள் ||


1. ஹனுமான் சாலீஸா

ஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் பெருமையை, மஹிமையை நாற்பது ஈரடியில் அனுபவித்து படைத்துள்ளார்.   இது வெறும் ஸ்துதி அன்று.   மாபெரும் 'ஸித்த க்ரந்தம்'.   ஸ்ரீமத் இராமாயணம் மாபெரும் காவியம், இதிகாஸம். இராமாயணத்தைப் படிப்பதின் பலன் யாவரும் அறிந்த ஒன்று. இதை முழுவதும் எளியவரும் படிக்க முடியும் வகையில் 'ராம சரித்ர மானஸ்' என்ற காவியத்தை படைத்தவர் இவர்.  இன்றும் வடநாட்டில் இது பலரால் படிக்கப் பட்டு வருகிறது. ஸ்ரீதுளசிதாஸர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர்.        சொடுக்கவும்


2. ஹனுமான் சங்கட மோட்சன அஷ்டகம்

ஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஹனுமான் சாலீஸா [நாற்பது ஈரடி] படித்தவுடன் சங்கடங்களை போக்கும் இந்த அஷ்டகத்தையும் படிப்பது வடநாட்டில் வழக்கத்தில் உள்ளது.       சொடுக்கவும்


3. பீமரூபி

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதாரமான ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களால் இயற்றப்பட்டது இந்த ஸ்துதி. மஹான் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களைப் பற்றி ஸ்ரீ காஞ்சி ஸ்ரீஸ்ரீபரமாச்சாரியார் கூறியதை நம் கட்டுரை பகுதியில் காண்க.  அம் மஹான் 'த்ரயோதஸாக்ஷரி' என்ற 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்கின்ற மஹா மந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர்.       சொடுக்கவும்


4. பஜ்ரங் பாண்

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் வஜ்ரங்க அம்பு. இந்த ஸ்துதியில் பீஜ மந்திரங்கள் உள்ளன.   சரியான உச்சரிப்புடன் கூறப்படுமானால் வாழ்வில் எல்லா தடைகளையும் வெற்றி கொள்ள முடியும்.        சொடுக்கவும்




|| ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க ||

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்

நம்பினோம் நாவரசை நாங்களே

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.